உள்நாடு

அனுராதபுர ஆஸ்பத்திரியின் 4ஆவது மாடியிலிருந்து பாய்ந்த நோயாளி பலி

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவில் 4 ஆவது மாடியில் அமைந்துள்ள 66 வது வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் மாடியிலிருந்து பாய்ந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பரசன்கஸ்வெவ பாணியன்கடவல பகுதியைச் சேர்ந்த எச்.ஏ.சேநாரத்ன என்ற 41 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வைத்தியசாலை மாடியில் இருந்து கீழே வீழ்ந்ததன் பின்னர் 11 ம் வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அவரது மூத்த சகோதரனின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாடியில் இருந்து கீழே விழுந்ததுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *