உள்நாடு

கற்பிட்டியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

கற்பிட்டி செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் புத்தளம் தகவல் அறியும் உரிமை மையத்தின் ஏற்பாட்டில் ட்ரான்ஷ்பேரன்சி இன்டர்நெசனல் சிறீலங்கா நிறுவனத்தின் பங்குபற்றுதலுடன் சனிக்கிழமை (26) கற்பிட்டி சியாப் மண்டபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட தகவல் உரிமை மையத்தின் பொறுப்பாளரும் சையில்ட் விஷன் நிறுவனத்தின் பணியாளருமான ஏ.சீ.எம் றுமைஸின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமானது அதனைத் தொடர்ந்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ஜவாஹிரா நாஹூர், எஸ்.எல்.ஏ.சீ முகாமையாளர் சட்டத்தரணி இஸட் ஹனியா, உதவி நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சிந்துஜா மற்றும் பயிலுனர் ஹஷானி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு, லஞ்சம் மற்றும் ஊழல் ஆகிய தலைப்புக்களில் விழிப்புணர்வு தெளிவூட்டல்களும் பங்குபற்றியவர்களின் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் சட்டதிட்டங்கள் பற்றிய அறிவூட்டல்களும் வழங்கப்பட்டன

இக் கருத்தரங்கில் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், கிராம சேவையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மீனவ சங்கத் தலைவர்கள், மகளீர் சங்கத்தின் தலைவிகள், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் கற்பிட்டி செடோ சிறீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முனாஸ் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *