உள்நாடு

இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் நிரந்தர வதிவிட பிரதிநிதி அஸூஸா குபோடா மேல் மாகாண ஆளுநருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் (UNDP)இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அஸூஸா குபோடா (Azusa Kubota)மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை ஸ்ரீஜயவர்தனபுர பத்தமுல்லவில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் சந்தித்து சினேகபூர்வ பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார்.

நாட்டினதும் மேல் மாகாணத்தினத்தையும் கட்டியெலுப்புவதற்கான வேலைத் திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குமாறு இப்பேச்சுவார்த்தையின்போது வதிவிட பிரதிநிதியிடம் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக போராடும் திட்டத்தையும் அஸூஸா குபோடா பாராட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவது தொடர்பில் ஆளுநர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *