Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

இப்திகார் ஜெமீல், அஸ்லம் ஹாஜியின் வெற்றிக்காக மருதானை மக்கள் ஒன்றினைவு.

ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான இப்திகார் ஜெமீல்,எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் ஆகியோரை ஆதரித்து பேருவளை நகர சபைக்குட்பட்ட மருதானை அரப் வீதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

சமூக சேவையாளரும் பைன் ஜெம்ஸ் மற்றும் ஜுவலரி நிறுவன உரிமையாளருமான முஹம்மத் ஆரிப் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் கட்சி ஆதரவாளர்கள்,வர்த்தகர்கள் சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள் என பெருமளவினானோர் பங்கு பெற்றியதோடு இம் முறை தேர்தலில் இப்திகார் ஜெமீல் அஸ்லம் ஹாஜியார் ஆகியோரின் வெற்றிக்காக மருதாணனை பகுதி மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுத்தர முழு மூச்சுடன் உழைப்பதாக உறுதி அளித்தனர்.

மருதானை பகுதி நூற்றுக்கு 90 வீதம் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களைக் கொண்ட கிராமம் ஆகும். இத்தேர்தலில் இவ்வூர் மக்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடும் இப்திகார் ஜெமீலையும் அஸ்லம் ஹாஜியாரையும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய எல்லா கருத்து வேற்றுமைகளையும் மறந்து ஓர் அணியில் கைகோர்த்துள்ளதை வேட்பாளர்கள் பாராட்டினர்.

சமூக சேவையாளர் முகமத் ஆரிப் ஹாஜியார் இஸ்திகார் ஜெமீலை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

பேருவளை நகர சபை முன்னாள் உப தலைவர் ஹஸன் பாஸி,நகர சபை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தஹ்லான் மன்சூர்,நகர சபை வேட்பாளர்களான எம்.இஸ்பிஷார்,நிஸ்ரான் ராஜா, பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவர் நிஸாம் ஹாஜியார்,ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எஸ்.எம்.ஹுஸைன்,சமூக சேவையாளர் எம்.பாஸி ஸுபைர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மருதானை பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுத்து முழுமையான ஆதரவை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெற்றுக் கொடுக்க இளைஞர்கள் எங்கு உறுதியளித்தனர்.

கடந்த கால வேற்றுமைகளையும் மனக் கசப்புகளையும் மறந்து ஒன்றுபட்டு ஓரணியில் கைகோர்த்து செயற்படுவதன் மூலம் இரு வேட்பாளர்களையும் தெரிவு செய்ய முடியும்.பின்னர் அந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நமது பகுதியில் அபிவிருத்தி பணிகளையும்,மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என இங்கு உரையாற்றிய பிரமுகர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின்னால் மாத்திரமே சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைஇம் மாவட்டத்தில் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை வலியுறுத்திய பிரமுகர்கள் வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு சமனாகும் என தெரிவித்தனர்.

பேருவளை மருதானைப் பகுதி முஸ்லிம்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள ஒன்றுபட்டுள்ளமையானது முழு நாட்டிற்கும் முன்மாதிரியாகும் என வேட்பாளர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் கூறினார்.

மருதானையை கட்டியெழுப்பவும் இரு பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு உதவவும் விசேட கவனம் செலுத்துவதாக இப்திகார் ஜெமீல் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *