கற்பிட்டியில் இடம்பெற்ற இலவச பாரம்பரிய நாட்டு வைத்திய முகாம்
கற்பிட்டி செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச பாராம்பரிய நாட்டு வைத்திய முகாம் ஒன்று சனிக்கிழமை (26) கற்பிட்டி செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் தலைமையகத்தில் புத்தளம் மாவட்ட நாட்டு வைத்திய சம்மேளனத்நின் இணைப்பாளர் வைத்தியர் வேற பிட்டிய தலைமையில் இடம்பெற்றது.
இவ் இலவச நாட்டு வைத்திய முகாமில் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள நாட்டு வைத்தியர்களான இயற்கை மூலிகை மருத்துவர் மற்றும் சர்வாங்கம் வைத்தியர் பி.எம் முஹமட் இமாம்தீன், சர்வாங்கம், பாரம்பரியம் வைத்தியர் பி.எம்.எம்.எஸ். அப்துல் காதர், சர்வாங்க வைத்தியம்- வைத்தியர் ஏ. எம் .நாசர், காயங்கள், புற்றுநோய், உடைவு முறிவு வைத்தியர் பி.எம். மேரி மெடில்டா, உடைவு முறிவு, மூல நோய் , வைத்தியர் இனாயா பேகம் மற்றும் உடைவு முறிவு வைத்தியர்களான மொஹமட் அஷ்ரப், உமைதீன் பிச்சை, நிசார்தீன், சி, பி. பெட்ரிக் சர்ஞன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பட்ட நோய்களுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது.
மேற்படி இலவச வைத்திய முகாமுக்கான சகல ஏற்பாடுகளும் கற்பிட்டி செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ ஆர்.எம் முனாஸ் மற்றும் அதன் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கற்பிட்டி பிரதேச நாட்டு வைத்தியர் சங்கத்தின் தலைவர் மௌலவி எஸ் எச் எம் மல்ஹார் தெரிவித்தார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)