வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு பொதிகள் கையளிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் கொழும்பு மாவட்டத்திலும் பல பகுதிகளில் வெள்ள நீர் மக்களின் குடியிருப்புக்ளுக்குள் புகுந்து பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் வெலேயவத்தை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளம் முஸ்லிம் வாலிபர் சங்கமும் மத்திய முஸ்லிம் வாலிபர் சங்கமும் இணைந்து வெலேயவத்தை மஸ்ஜித் யாசிர் பின் அம்மார் பள்ளிவாசலிற்கு உட்பட்ட பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவினத்தையும் சேர்ந்த சுமார் 100 பேருக்கு உலர் உணவு பொதிகள் இன்று (26) வழங்கி வைக்கப்பட்டது.
இளம் முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவர் அம்கர் சரிப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சங்கத்தின் மத்திய கிளையின் தலைவர் எம்.எம்.ஏ.சலாகுதீன் உள்ளிட்ட அங்கத்தவர்கள் பள்ளிவாசலின் தலைவர் இர்ஸாத் உள்ளிட்ட நம்பிக்ககையார் கபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)