மத்திய மாகாண அரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்.
மத்திய மாகாணத்திலுள்ள நான்கு அரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ். அபேகோன் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். கண்டி ஆளுநர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கண்டி ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக காமினி ராஜகருணவும் ,மத்திய மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக பி.எஸ்.கே. லங்கேஷ்வரவும்
மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக பீ.பீ. ஏ. என். சந்திரசிறி மற்றும் மத்திய மாகாண நூலக சேவை சபையின் புதிய தலைவராக ஏ.ஜி. தனபாலவும் நியமிக்கப்பட்டனர்.
(ரஷீத் எம். றியாழ்)