தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக வீழ்ச்சி
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் நேற்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெருமளவு மரக்கறி வகைகள் வந்து சேர்ந்த போதிலும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான வெளி வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதுடன், நுகரப்படும் மரக்கறிகளின் அளவும் குறைவடைந்தமையினால் வியாபாரிகளின் வருகையும் குறைந்துள்ளதாக இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலையகப் பகுதிகளில் இருந்து வரும் பச்சை மிளகாய், கத்தரி, தக்காளி, கரட், வெண்டிக்காய், போன்ற மரக்கறிகள் 50 முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பெரும்பாலானவை விற்பனை செய்யப்படாமல் நாளுக்கு நாள் அழிந்து வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்குள்ள மரக்கறிகளில்
வெள்ளரிக்காய் கிலோ ஒன்றின் விலை ரூபா 20 முதல்30 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ரஷீத் எம். றியாழ்)