தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் நம்பிக்கை இழப்பு.ஐக்கிய மக்கள் சக்தி அரசமைக்கும்.இப்திகார் ஜெமீல் நம்பிக்கை.
தேசிய மக்கள் சக்தி மீது நாட்டு மக்கள் ஒரு மாத காலத்திற்குள்ளே நம்பிக்கை இழந்துள்ளதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளரும் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான அல்-ஹாஜ் இப்திகார் ஜெமீல் கூறினார்.
பேருவளை பெருகமலையில் பொதுத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இவர் இவ்வாறு கூறினார்.
பெருமளவிலான ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் மேலும் கூறியதாவது-
ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற ஒரு மாதமாகின்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்த மக்கள் தாம் வரலாற்றுத் தவறொன்றை செய்துள்ளதை மூக்கில் விரலை வைத்து சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
தேர்தலில் ஆயிரம் வாக்குருதிகலை வழங்கினார்கள். குடும்ப ஆட்சியை ஒழிப்பதாக கூறினார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடனடியாகவே குறிப்பதாக மேடை தோறும் பேசினார்கள். கடன் எடுக்கவும் மாட்டோம் என்றார்கள்.எரிபொருல் விலையை உடனடியாக குரைப்போம் என்று சொன்னார்கல் .ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை பதவிக்கு வந்து 40 நாட்களில் எத்தனையோ ஆயிரம் கோடி ரூபாவை கடனாக பெற்றுள்ளனர்.
வரலாற்றில் முதல் தடவையாக நாட்டில் தேங்காய் விலை என்றுமில்லாத அளவு கூடியுள்ளது. முட்டையின் விலையும் கூடி வருகிறது. மக்கள் 200 ரூபாவுக்கு தேங்காயும் 50 ரூபாய் முட்டையும் வாங்குகின்றனர்.
ஊழல்,லஞ்சம் பற்றி பேசுகின்றனர் கடந்த ஆட்சியில் கூட இப்படி தேங்காய் விலை கூட வில்லை.
தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் மக்கள் ஒரு மாத காலத்திற்குள்ளே ஏமாற்றப்பட்டுள்ளனர்.இனியும் எப்படி இவர்கலை நம்பி வாக்களிக முடியும் என்றும் தெரிவித்தார்.
மேடைகளில் இனிமையாக பேசி மக்களை திசை திருப்பி திசை காட்டி வாக்குகளை பெற்றது. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே பொதுத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை இவர்களுக்கு புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)