நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்த ட்ரோன்
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது புதன்கிழமை (23)பிற்பகல் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா ஒன்று மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை விமானப்படை மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக புத்தளத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆளில்லா விமானத்தின் கெமரா மூலம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சட்டப்பூர்வ அனுமதியின்றி ஆலைக்கு மேலே ட்ரோன் கேமராவை பறக்கவிடுவது சட்டவிரோதமானது.
குறித்த ட்ரோன் கெமரா தொடர்பான மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(கற்பிட்டி எம் எச் எம்
சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்)