எமது மக்கள் வாக்குரிமைக்கான புள்ளடியின் பாரிய சக்தியை என்றுமில்லாதவாறு இன்று கண்டுகொண்டுள்ளனர்
மக்களின் வாக்குரிமைக்கான புள்ளடி என்பது மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதுடன் மக்கள் சக்தி மற்றும் மக்கள் இறைமை என்பவற்றை ஒருபோதுமில்லாதவாறு கண்முன்னே காண்பதற்கான சந்தர்ப்பம் இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.இந்த புள்ளடியின் சக்தியை மறைத்து வைத்தபோதிலும் அதன் முறையான வலிமையைக் காணும் வாய்ப்பு இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.மக்களின் வாக்குரிமைக்கான புள்ளடியின் பலம் எண்பத்தெட்டு வருடகாலத்துக்குப் பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தை தேசத்தின் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்துள்ளதுடன் அருபது பேரளவிலான அரசியல்வாதிகளையும் அரசியல் ஓய்வு நிலைக்குத் தள்ளியுள்ளது.
நாட்டின் அடுத்த புதிய பாராளுமன்றம் நேர்மையானவர்களைக் கொண்ட புது முகங்களுடன் உருவாகும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நிறைந்து காணப்படும்.இதற்கான பணி நவம்பர் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது இந்த பணியில் அனைத்து மக்களும் பங்களிப்பு நல்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) களுத்தறை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் “கிராமத்துக்கு கிராமம்” தேர்தல் பிரசாரம் வேலைத் திட்டத்தின் கீழ் இடம்பெற்று வரும் பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் சக்தி தொடர்பில் கடந்த காலத்தில் மக்கள் கண்டுகொண்டனர்.அதனை அரகலயவிலும் தெரிந்து கொண்டனர்.ஒரு புள்ளடியின் மூலம் அறுபது பேரளவில் அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த புள்ளடியின் மூலம் ராஜபக்ஷ குடும்பமே தேர்தலில போட்டியிடுவதை தவிர்க்க முடியுமென யார் நினைத்தனர்.இது இலகுவான காரியமல்ல.எண்பத்தெட்டு வருடங்களின் இந்த குடும்பம் அரசியலிலிருந்து ஒதுககியுள்ளது.ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் நூற்ற்றாண்டு விழா கொண்டாட எதிர்பார்த்திருந்தனர்.
நாட்டு மக்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி தெரிவு செய்யபபட்டுள்ளார்.நாட்டில் ஏதோவொரு சுதந்திரம் மாற்றம் ஏற்பட்டுளளதை அனைவரும் உணர்கின்றனர்.மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதை தவிர்த்துள்ளதை செயல்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளனர்.இந்த குறுகிய காலத்தில் சிறிதளவேனும் முடிந்த நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும்.மக்களுக்கு நிர்வாகத்தின் மாற்றம் விளங்க ஆரம்பித்துள்ளது.மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகபோக வாழ்க்கை இனிமேலும் தொடராது காலாவதியாகும்.மதுபான கம்பனிக்காரர்கள் அரசுக்கான வரிப்பணத்தை செலுத்தவில்லை
கடந்த காலத்தில் இடைநடுவில் கைவிடப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஜப்பான் அரசாங்கம் விமான நிலைய அபிவிருத்தி மற்றும் புகையிரத வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.அடுண்த ஆண்டில் நாற்பது லட்சம் உல்லாசப் பயணிகளை நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத் திட்டமொன்றும் எமக்கு உள்ளது.இதற்காக சக்திமிக்க அரசாஙகமொன்று உருவாக்கப்படல் வேண்டும்.அனைத்து மக்களும் சக்திமிக்க அரசை உருவாக்க பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்துக்கான பதினான்கு பேரடங்கிய வேட்பாளர் பட்டியலில் அரூஸ் அஸாத் உட்பட இரண்டு பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.கடந்த பொதுத் தேர்தலில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் உறுப்பினர் தொகை ஒன்றால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்,எஸ்,எம்.முன்தஸிர்)