உள்நாடு

புத்தளம் தளவைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை கூடத்துக்கு தேவயானை ஆடை துணி கையளிப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் செயலாளர் அஷ்ஷேக் அஸீம் அர்ரஹமானீ, பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் நிஜாம் ஆசிரியர், நஹ்தா அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் அஜ்மல் மற்றும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் முஜிபர் ஆகியோர் இணைந்து புத்தளம் தளவைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை கூடத்துக்கு தேவயானை ஆடை துணிகளை 17.10.2024 வியாழக்கிழமை புத்தளம் தளவைத்தியசாலையின் Medical Superintend அவர்களின் கரங்களில் ஒப்படத்தனர்.

புத்தளம் தளவைத்தியசாலையின் உயர் அதிகாரிகளுடனும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து நல்ல விடயங்களிலும் முழுமையாக உதவி செய்யும் என்று தலைவர் அவர்களால் கூறப்பட்டது.

இதற்காக உதவி செய்த அல்ஹாஜ் ஜே.டி.எம். நியாஸ் அல்ஹாஜ் நஸ்ரூன் மற்றும் அல்ஹாஜ் நஜாத் அவர்களின் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் அல்லாஹூ தாஆலா பரகத் ரஹ்மத் செய்வானாக.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *