நாளை மறுதினம் எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ ஏ தர்மஸிரி தெரிவித்தார். வாக்குப் பெட்டிகள் நாள உரிய இடங்களுக்கு எடுத்துச் சொல்லப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் 600 அரச ஊழியர்களும் 500 பொலிஸாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும குறிப்பிட்டார். வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 10.00 மணிகுள் முடிவுகள் அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.