வரலாற்றின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் விருதை வென்றார் லயோனல் மெஸ்ஸி
ஸ்பெய்னின் மார்கா பத்திரிகையில் உதைப்பந்தாட்ட வரலாற்றில் அனைத்து காலக் கட்டத்திலும் சிறந்த வீரருக்கான விருதினை வெற்றி கொண்டார் ஆர்ஜன்டீனா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சி.
ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பிரபல உதைப்பந்தாட்ட செய்திகளை உள்ளடக்கிய பத்திரிகையான மார்கா இ;விருதினை வருடாந்தம் வழங்கி வருகின்றது. அதற்கமைய இம்முறை விருதிற்கு உதைப்பந்தாட்ட உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதற்கமை தெரிவாகிய வீரர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடு மற்றும் தமது அணிக்காக, நாட்டுக்காக வென்றுகொடுத்த கிண்ணங்கள் உள்ளிட்ட விடயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்தவகையில் அனைத்து காலத்திலும் சிறந்த உதைப்பந்தாட்ட வீரராக ஆர்ஜன்டீனா அணிக்காக உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்சி தேர்வு செய்யப்பட்டு அவருக்கான விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
குறிப்பாக மெஸ்ஜி தனது உதைப்பந்தாட்ட வாழ்க்கையில் இதுவரை ஒரு உலகக் கிண்ணத்தினை 2022இல் ஆர்ஜன்டீனா அணிக்காக பெற்றுக் கொடுத்துடன், இரண்டு கோபா அமெரிக்கா கிண்ணங்களையும் ஆர்ஜன்டீனாவிற்காகப் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் 3 கிளப் உலகக்கிண்ணங்களை பார்ஸிலோனா கழகத்திற்காகப் பெற்றதுடன், 4 சம்பிய்னலீக் கிண்ணங்களையும் பார்சிலோனா கழகத்திற்காகப் பெற்றுக் கொடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் மொத்தமாக 46 கிண்ணங்களை மெஸ்ஸி தான் பிரதிநிதித்துவம் செய்த அணிக்காகவும், கழகத்திற்காகவும் வென்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இ;விருக்கான போட்டியில் போர்த்துல் உதைப்பந்தாட்ட அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது இடம் பிடித்ததுடன் பிரேசில் அணியின் உதைப்பந்தாட்ட ஜாம்பவானான மறைந்த பெலேவுக்கு மூன்றாவது இடம் கிடைத்ததுடன் மற்றுமொறு ஆர்ஜன்டீன ஜாம்பவானான மரடோனாவிற்கு நான்காவது இடம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)