Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

27ல் பேருவளை வரும் ஜனாதிபதி அனுர,பிரதமர் ஹரிணி; பிரசாரக் கூட்டத்தில் உரை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி (27-10-2024) ஞாயிற்றுக்கிழமை பேருவளைக்கு விஜயம் செய்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அரூஸ் அஸாத் உட்பட ஏனைய வேட்பாளர்களை ஆதரித்து பேருவளை கடற்கரை மைதானத்தில் பி.ப. 4.00 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.

பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமர சூரிய,களுத்துறை மாவட்ட தலைமை வேட்பாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் இங்கு உரையாற்றுவர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *