Wednesday, October 30, 2024
Latest:
உள்நாடு

வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி.பரிசோதனை செய்யப்படுகின்றனர்

பெரும்பாலும் ஆண் ஓரினச்சேர்க்கை காரணமாக எச் ஐ வி தொற்று பெருமளவில் அதிகரித்துள்ளது. கடலோர பாலியல் தொழிலாளர்கள் (Beach boys) பல்வேறு மாத்திரைகளை உபயோகிப்பதால் தொற்று பரவுவதைத் தடுக்கின்றனர்.எனினும் வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இதற்காக நாடளாவிய ரீதியில் 40 சிகிச்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன்.2025 ஆம் ஆண்டாகும் போது எச் ஐ வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,700 ஆக அதிகரிக்கும்.2030 ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டில் எச் ஐ வி தொற்று நோயை முற்றாக ஒழிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

இங்கு அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பாலியல் மற்றும் எச் ஐ வி தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவிக்கையில்:- தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் 148 எச்.ஐ வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன் முதலில் மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். தற்போது இனங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 83 ஆண்களும் 27 பெண்களும் அடங்குகின்றனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் வருடத்திற்கு 11 இலட்சத்து 22 ஆயிரம் பாலியல் பாதுகாப்பு கொனியடின் (Condam) விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட மேலும் தெரிவித்தார்.

  (எம்.ரீ. ஆரிப்
(அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *