உள்நாடு

இஸ்லாமிய அடிப்படைகள் என்ற தலைப்பில் கெச்சிமலை தர்காவில் செயலமர்வு

அலவிய்யா இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் இஸ்லாமிய அடிப்படைகள் எனும் தலைப்பில் ஒரு நாள் வதிவிட செயலமர்வொன்று எதிர் வரும் 26ம் திகதி (26-10-2024)சனிக்கிழமை முதல் மறுநாள் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்காவில் இடம் பெறும்.

பேருவளை பகுதியையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சேர்ந்த பாடசாலைகளின் 6ம்,7ம்,8ம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் 50 பேர் இந்த வதிவிட செயலமர்வில் பங்கு பற்றுவர். சங்கைக்குரிய அஷ் செய்ஹ் மௌலவி அல்-ஹாஜ் ஸக்கி அஹமத் பின் அஷ் செய்ஹ் காலிப் அலவி ஹாஜியார் அலவியத்துல் காதிரி நிகழ்வுக்கு தலைமை வகிப்பார்.

26ம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் இச் செலமர்வு ஆரம்பமாகி 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 5.00 மணி அளவில் நிறைவு பெறும். செயலமர்வில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு நிகழ்வு இறுதியில் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தலைசிறந்த புத்திஜீவிகள் உலமாக்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளதாக அலவிய்யா இளைஞர் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இச் செயலமர்வின் பிரதான நோக்கம் இளம் மாணவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை தெளிவாக விளக்கி சமூக சீரழிவுகளில் சிக்கிவிடாது பாதுகாப்பதாகும்.

சங்கைக்குரிய அஷ் செய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி-யமனி) பின் அஷ் செய்ஹ் காலிப் அலவி ஹாஜியார் அலவியத்துல் காவிரியின் வழிகாட்டலின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அலவிய்யா இளைஞர் முன்னணி முதல் தடவையாக இச் செயலமர்வை நடாத்துகிறது.

இளைஞர்கள் எதிர்மறைவான பழக்கவழக்கங்கள் மற்றும் கவனச் சிதறல்களால் அதிகம் பாதிக்கப்படும் தற்சமயத்தில்,இந்த போக்குகளை மாற்றியமைக்கவும் நடைமுறை மற்றும் இஸ்லாத்தை நன்கு பின்பற்றுபவர்களாக மாற்றுவதற்கும் இந்த ஆன்மீக செயலமர்வு மாணவர்களுக்கு பெரும் பலனளிக்கும் என்று அந்த முக்கியஸ்தர் மேலும் குறிப்பிட்டார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *