Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

அரசியல் அதிகாரம் கிடைத்தால் பெண்களின் நலன்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன்; வேட்பாளர் றோஹினா மஹ்ரூப்

நாட்டில் காணப்படும் பெரும் பிரதான கட்சிகளில் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோரில் பெண் வேட்பாளர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர் எமது கட்சித் தலைவர் இன மத வேறுபாடுகள் இன்றி எமது கட்சியின் பெண் வேட்பாளராக என்னை தெரிவு செய்துள்ளார்.

இதன் மூலம் எனக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தால் அதில் பெண்களின் நலன்களையும் விசேடமாக விதவைப் பெண்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்துவேன். ஏழைகளுக்காக சேவை செய்வதே எனது எதிர்கால அரசியல் அபிலாஷையாகும்.

என் சர்வஜன அதிகார கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் றோஹினா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா பூவரசந்தீவு மற்றும் அண்மித்த கிராமங்களில் பிரதேச மக்களிடையே நடந்த சிறு சிறு கலந்துரையாடல்களை அடுத்து ஊடகங்களுக்கு தகவல் வழங்குகளிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில், சகலரும் அறிந்த எனது தந்தை மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்கள் நேர்மையான அரசியலுக்கு பெயர் பெற்றவர் ஊழலற்ற அரசியல்வாதியாக செல்வாக்கு பெற்ற எனது தந்தையின் அரசியல் வழியில் அவரது கரை படியாத அரசியல் முன்மாதிரியை அவருடைய சந்ததிக்கு தொடர்வதே என்னுடைய நோக்கமாகும்

இன்று கட்சிகள் சிதறி காணப்படுகின்றன. ஊழல்வாதிகளை மக்கள் தோற்கடிக்க முன் அவர்களாகவே விலகியுள்ளனர். எங்கள் கட்சி என்னை நம்பி ஒரு வேட்பாளராக நிறுத்தியுள்ளது திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் பிரதிநிதித்தும் உருவாக எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

துணிச்சலான ஒரு எதிர்க் கட்சி தலைமை எமது நாட்டுக்கு தேவை.எமது கட்சித் தலைவர் இப் பதவிக்கு வருவார் அந்த வெற்றிடத்தை தலைவரின் சிறந்த வழிநடத்தலில் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் எங்கள் கட்சிக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை வைத்து இந்நாட்டின் தேசிய நீரோட்டத்தில் ஒரு பிரமாண்டமான அரசியல் சக்தியாக நாங்கள் உருவாக்கம் பெறுவோம் எனும் அவர் தெரிவித்தார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *