Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவரை விஷேட அதிரடிப்படையினரினால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.

புத்தளம் கொட்டுக்கச்சி கல்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றை இன்று பிற்பகல் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபடுகிறது.

சந்தேக் நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவற்றை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(ஏ.என்.எம். முஸ்பிக் – புத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *