விளையாட்டு

இலங்கைக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடருக்கான நியூஸிலாந்து குழாம் அறிவிப்பு; முன்னனி வீரர்கள் பலர் இல்லை

இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான மிச்சல் சாண்ட்னர் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான வீரர்கள் பலர் இணைக்கப்படவில்லை.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. இதில் இலங்கை அணி இரு போட்டிகளையும் வெற்றி கொண்டு தொடரை 2:0 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இத் தொடரின் அடுத்த போட்டிகளான 2 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கின்றது.

அதற்கமைய முதல் ரி20 போட்டிகளில் முதல் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதியும், எதிர்வரும் 10ஆம் திகதியும் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது. பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி தம்புள்ள ரங்கிரி மைதானத்திலும், 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகள் முறையே எதிர்வரும் 17 மற்றும் 19ஆம் திகதிகளில் கண்டி பல்லேகல மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இத் தொடருக்கான மிச்சல் சாண்ட்னர் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட நியூஸிலாந்து குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இத் தொடரில் நியூஸிலாந்து அணியின் அனுபவமிக்க நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கேண் வில்லியம்ஸன் உபாதைகாரணமாக அணியில் இணைக்கப்படவில்லை. அவருடன் அவ் அணியின் முன்னனி வீரர்களான கொன்வே, லெத்தம், டெரன் மிச்சல், ரிச்சின் ரவீந்திர மற்றும் டிம் சௌதி ஆகியோர் இத் தொடரில் உள்ளடக்கப்படில்லை.

இதன் காரணமான மிச்சல் சாண்ட்னர் முதல் முறையாக நியூஸிலாந்து அணியினை வழிநடாத்தவுள்ளார். மேலும் இத் தொடருக்கு இளம் அறிமுக வீரர்களான நதன் ஸ்மித், மிச் ஹெய் ஆகியோருக்கு இத் தொடரில் அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியின் துடுப்பாட்ட வீரர்களாக கிளன் பிலிப்ஸ், சப்மென் மற்றும் பிரஸ்வெல் ஆகியோருடன் இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்னனர். பந்துவீச்சாளர்களாக லுகி போர்கியூஸன், ரொபின்ஸன் ஆகியோருடன் இளம் வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்க , சுழல்பந்துவீச்சாளரான இஷ் ஷோதி உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *