சர்வதேச பொறியியல், தொழில் நுட்ப கண்காட்சியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்றார் ஒலுவில் முஹம்மட் சிமாம்.
கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த வாரம் தேசிய ரீதியில் நடைபெற்று முடிந்த சர்வதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் ஒலுவிலைச் சேர்ந்த நிந்தவூர் அல் -அஷ்ரக் தேசிய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் லாபிர் முஹம்மட் சிமாம் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.
இலங்கை தேசிய மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இவருடைய கண்டுபிடிப்பாக போக்குவரத்து கட்டுப்பாட்டு ரோபோ (Humanized Traffic Controller Robot) காணப்பட்டது.
இப் போட்டியில் 30 பாடசாலைகளிலிருந்து 30 இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டணர். இம் மாணவன் ஒலுவில் மீடியா ஊடக வலையமைப்பின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இம் மாணவனுக்கு ஊர் மக்கள்,பாடசாலை சமுகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
(இஸட்.ஏ.றஹ்மான்)