ஸ்ரீரங்காவை கைது செய்யாதது ஏன்?நீதிமன்றத்தில் சட்டத்தரணி கேள்வி
மன்னார் மேல் நீதிமன்ற நீதிவானுக்கு
(எம்.எம்.எம்.மிஹால்) அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு எதிராக கொழும்பில் நகரில்
போஸ்டர் கள் காட்சிப்படுத்திய
சம்பவ சூத்திரதாரி என நீதிமன்றத்தில்
பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை பாதுகாப்பு பிரிவு இதுவரை கைது செய்யாதது ஏன் என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிவான் திலின கமகே
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது சட்டத்தரணி இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.
இவ்வழக்கு விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எனது கட்சிக்
காரர்கள் 8 பேரும் அச்சிடப்பட்டிருந்த
அந்தப் போஸ்டர்களை கொந்தராத்து அடிப்படையில் ஒட்டுவதற்கு ஒப்புக் கொண்டவர்களாவர் அவற்றின் உள்ளடக்க விடயம் என்னவென்று அவர்களுக்கு தெரியாது.உண்மையில் அவற்றில் ஒரு நீதவானுக்கு எதிரான விடயங்கள் அடங்கியிருந்தமை
தெரிந்திருந்தால் அவர்கள் ஒருபோதும் இச்செயலை செய்திருக்க மாட்டார்கள்.
எனினும் எனது கட்சிக்காரர்களுக்கு இந்தக் கொந்தராத்தை வழங்கியதாக
கூறப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை பாதுகாப்பு தரப்பினர் ஏன் கைது செய்யவில்லை
எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த பொலீசார் உரிய நபரை கைது செய்ய சந்தேகத்துக்கு இடமான அனைத்து இடங்களிலும் தேடுதல் நடத்தினாலும் அவரை கைது செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த நீதவான்
இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரியாக பெயர் குறிப்பிடப்படும் ஸ்ரீரங்காவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
(பாயிஸ் அஸீஸ்)