உள்நாடு

சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்.

களுத்துறை மாவட்ட சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டி களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் சகல வேற்றுமைகளையும் மறந்து ஒன்றுபட வேண்டிய யுகம் ஏற்பட்டுள்ளதாக பேருவளை நகர சபை முன்னாள் உப தலைவர் அல்ஹாஜ் ஹஸன் பாஸி தெரிவித்தார்.

பேருவளை மஹகொடை யில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பிரதேச முக்கியஸ்தர்களுடனான விஷேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் அல்-ஹாஜ் இப்திகார் ஜமீல் யின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் மேலும் உரையாற்றும் போது, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வேட்பாளர்களான இப்திகார் ஜமீல், அஸ்லம் ஹாஜியார் ஆகியோரை அதிக விருப்பு வாக்குகளினால் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வெற்றியின் பங்காளர்களாக ஆகுவோம்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்காவும், மாவட்ட முஸ்லிம் கிராமங்களின் கல்வி, சமய, சமூக முன்னேற்றத்திற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜமீல் ஆற்றியுள்ள பணிகள் மகத்தானது.

எவ்வித வேறுபாடுகளுமின்றி இப்திகார் ஜமீல் மாகாண சபை மூலம் பாரிய சேவைகளை செய்துள்ளார். இவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதன் மூலம் மேலும் பல சேவைகளை சமூகம் பெற்றுக் கொள்ள முடியும்.

இப்திகார் ஜமீல் அரசியல் அனுபவமுள்ள முதிவர் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் காத்திரமான பல வேலைகளை வகுத்துள்ளார்.

இவ்வாறு, சமூக உணர்வு, சேவை மனப்பாங்கு உள்ளவர்களையே மக்கள் பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும்.

அதேபோல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஹாஜியாரும் இம்மாவட்ட முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பல பாரிய சேவைகளை செய்துள்ளார். அவரையும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது எமது கடமையாகும். இப்திகார் ஜமீல், அஸ்லம் ஹாஜியார் ஆகியோரின் பாராளுமன்ற பிரசங்கத்தின் மூலம் எதிர்காலத்தில் பாரிய சேவைகளை பெற்றுக் கொள்ள உரிய வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைவோம்.

கடந்த இரு தசாப்த காலமாக, களுத்துறை மாவட்ட மக்கள் சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கின்றனர். கடந்த 20 வருடங்களாக இம்மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிந்து சின்னாபின்னமாகியமை தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தோம்.

இந்த வரலாற்று தவறை இந்த முறையும் செய்து விடாமல் புத்திசாலித்தனமாக சிந்தித்து வெற்றிபெறக் கூடிய, அரசியல் அனுபவமுள்ள, சேவை மனப்பான்மையுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜமீல் யின் கரங்கள் தூய்மையானது. நீதியாகவும், நேர்மையாகவும், ஊழல், இலஞ்சம் இன்றியும், இன, மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளின்றி அரசியல் பணியை முன்னெடுத்தவர் களுத்துறை மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டவர்.

எனவே, இப்திகார் ஜமீல் யும் , அதேபோல் முன்னாள் எம்.பி அஸ்லம் ஹாஜியாரையும் தெரிவு செய்ய அணி திரள்வோம் என்றார்.

இக் கூட்டத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், பிரதேச வர்த்தகர்கள், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *