கிழக்கு மாகாண சோட்டோக்கன் கராத்தே சுற்றுப் போட்டியில் SKMS மாணவர்கள் தேசியப் போட்டிக்கு தெரிவு
கிழக்கு மாகாண ஸ்ரீ லங்கா சோட்டோக்கன் கராத்தே தோ சம்மேளனத்தினால் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட கராத்தே சுற்றூப் போட்டியில் SKMS கராத்தே மாணவர்கள் 49 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மிக விமர்சயாக நடைபெற்ற இப்போட்டியில் காட்டா மற்றும் குமித்தே ஆகிய இரு பிரிவிலும் பங்கு பற்றி 18 தங்கப் பதக்கத்தினையும், 19 வெள்ளிப்பதக்கத்தினையும் மற்றும் 12 வெண்கலப்பதக்கதினையும் பெற்று வெற்றியீட்டி நவம்பர் மாதம் சுகததாச உள்ளரங்கில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.
இப்போட்டியில் SKMS பாடசாலையின் பிராந்திய கராத்தே நிலையங்களைச் சேர்ந்த ஓட்டமாவடி,வாழைச்சேனை, ஏறாவூர்,நிந்தவூர் பிரதேச மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் இவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை பிரதம போதனாசிரியர் சிஹான் Ms.வஹாப்தீன் அவர்களின் மேற்ப்பார்வையின் கீழ் பயிற்றுவிப்பாளர்களான சென்செய் றினோஸ்,முபாரக், ஆதில்,அஹமட் நிம்ஷி,மினாத் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இப் போட்டிக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை SKMS கழகத்தின் கராத்தே தொழில்நூட்ப ஆலோசரும் ,ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் உப செயலாளரும் மற்றும் ஸ்ரீ லங்கா சோட்டோக்கன் கராத்தே தோ சம்மேளனத்தின் செயலாளருமான சிஹான் ZA.Rauf அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.