கற்பிட்டி ICAM ABACUS மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா ICAM அபகஸ் கற்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் எம். முர்ஷிதா ஷரீன் விசேட அதிதியாக ICAM அபகஸ் (ABACUS ) நிறுவனத்தின் இலங்கை கிளையின் பொறுப்பாளர் திருமதி சஷுக்கரா ஷாபி உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிள்ளைகளை திறமையானவர்களாகவும் விவேகமானவர்களாகவும் வளர்ப்பதற்கு அவர்களின் எண் கணித அறிவை மேம்படுத்துவது இன்றியமையாமதாகும். இன்று கணித புதிர்கள் அனைத்தும் நவீன சாதனங்களைக் கொண்டு தீர்க்கப்படும் சூழலில் மாணவர்களது கணித ஆற்றலையும், பல்திரன் கொண்ட வகையில் மாணவர்களை கட்டமைப்பதிலும் Abacus கணித செயற்திட்டம் கரிசனை செலுத்தி மாணவர்களை பயிற்றுவிக்கின்றது.
இந்த வகையில் ICAM அபகஸ் (ABACUS): நிறுவனத்தின் கற்பிட்டி கிளை பல்வேறு மாணவர்களை எண் கணித துறையில் பயிற்றுவித்து தேசிய சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்கேற்கச் செய்து பல சாதனைகளையும் நிலைநாட்டி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த பரிசளிப்பு மற்றும் பராட்டு விழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)