சிலாபத்தில் மூவர் உயிரிழப்பு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்
பிரேதப் பரிசோதனை முதலில் நடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கூரிய ஆயுதத்தால் 6 முறை குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் 18ஆம் திகதி இரவு இறந்திருக்கலாம் என்று தடயவியல் வைத்திய அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்ததாகவும், மறுநாள் உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மகள் நெத்மி நிமேஷாவின் கழுத்தில் 2 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதை சட்ட வைத்திய அதிகாரி அவதானித்துள்ளதுடன், அவர் கடந்த 19ஆம் திகதி இரவு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
உயிரிழந்த சேனாரத்னவின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த சேனாரத்ன காணிகளை சதி செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் பலரிடம் கடன் பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சிலாபம்-குருநாகல் வீதியில் கொக்கவில பிரதேசத்தில் தனது மனைவி மஞ்சுளா நிரோஷனிக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை சதி செய்து விற்பனை செய்ய மனைவியையும் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் மனைவி இந்த திட்டத்திற்கு சம்மதிக்கவில்லை.
இந்த வீட்டில் இருந்த 25 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதுடன் வெளியாட்கள் எவரும் வீட்டிற்குள் நுழையவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டில் எந்தவித பாதுகாப்பும் இன்றி நகைகள் கிடந்தது தெரியவந்துள்ளது.
இவ்விரு சம்பவங்கள் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் தங்களது அயலவர்களுடன் எந்த உறவையும் பேணவில்லை. இதனால் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த பல விபரங்களை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு, கணவன் தானும் உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.