Friday, August 22, 2025
உள்நாடு

அல்விஸ் அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு பாரிய குற்றச்சாட்டுக்கள்; ஐனாதிபதி உடன் அவரை பதவி நீக்க வேண்டும்; ஈஸ்டர் அறிக்கையை வெளியிட்டு கம்மன்பில வேண்டுகோள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ் ” ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (21) வெளியிட்டார்.

ஐ.எம்.இமாம் அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடுவேன் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

ஏ.என்.ஜே. தி அல்விஸ் அறிக்கையில், தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமது அரசியல் இலாபத்துக்காகவும் தமது சகாக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே இவ்விரு அறிக்கைகளையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிடாமல் இருக்கிறார்.

அதற்கமைய ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.

எனவே, அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாமை மற்றும் அறிக்கைகளை மூடி மறைத்தமைக்காக ஜனாதிபதி பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவோம் என்றும் சுட்டிக்காட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *