யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தி; வனஜீவராசிகள் திணைக்களம் அறிக்கை
நாடளாவிய ரீதியில் வனப்பாதுகப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரை 5500 கிலோமீட்டர் உள்ளடங்கும் வகையில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 1500 கிலோமீட்டருக்கான யானை வேலியை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானை வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் அவற்றை பராமரிப்பதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரை ஈடுபடுத்தவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளை அமைத்துள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)