மருதானையில் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட AMYS ன் பரிசளிப்பு விழா..!
முஸ்லிம் இளைஞர் சங்கம் செய்லான் (ஏ.எம்.வை.எஸ்) என்ற அமைப்பின் தலைவர் தாசீம் மௌலவி தலைமையில் கடந்த 25 வருட காலமாக கல்வி, இளைஞர் தலைமைத்துவம், சுகாதாரம் இயற்கை அனர்த்தம் போன்ற சமுக சேவைகளில் சகல சமுகங்களையும் இணைந்து இப் அமைப்பு இயங்கிவருகின்றது.
இவ் அமைப்பினால் வருடா வருடம் நோன்பு காலத்தில் ஊடகங்களில் நோன்பு காலங்களில் நோன்பு பற்றிய அறிவுகள் சார்ந்த கேள்விகள் ஊடகங்கள் வாயிலாக கேட்கப்படும் இந் நிகழ்வு கடந்த 15 வருட காலமாக நடைபெற்று வருகின்றது.
நாட்டின் நாலா பாகத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர்கள் ஆயிரக்கானோர் விடைகளை எழுதி இந் நிலையத்தின் முகவரிக்கு அனுப்புவார்கள் அதில் திறமையாக சித்தி பெற்றவர்களைச் தெரிபு செய்து பணப் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இவ் ஆண்டு யாப்னா முஸ்லிம் மற்றும் இஸ்மாயில் சலபி யு.டியூப் சனல் ஊடாக நோன்பு பற்றிய கேள்விகளுக்கு 1500பேர்களுக்கும் அதிகமானவர்கள் விடைகளை எழுதி இருந்தனர் அதில் முறையே முதலாம் ,பரிசு 50 ஆயிரம், ரூபாய் இரண்டாம் பரிசு 30 ஆயிரம் ருபா மூன்றாம் பரிசு 20 ஆயிரம் ருபாய், 50க்கும் மேற்பட்டோர்கள் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வு மருதானையில் உள்ள அல் ஷபா கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மௌலவி ஏ.எல். தாசீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும் கௌரவ அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூர் ஆமித் , சட்டத்தரனி சித்தீக், சட்டத்தரனி லுக்மான் சஹாப்தீன், மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவர் சாம் நவாஸ் உட்பட அதிதிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்
(அஷ்ரப் ஏ சமத்)