தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவம் மூலம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.கண்டி மாவட்ட வேட்பாளர் பஸ்மின்
கண்டியில் தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்றப் பிரதிநித்தவத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே இன்றைய சூழலில் அநுரகுமார திசாநாயக அவர்களுடைய தலைமையிலான ஆட்சியின் கீழ் கண்டியிலே முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் எமது தேவைகளையும் வளங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏம். எஸ். எம். பஸ்மின் தெரித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கண்டி நகரில் முஸ்லிம்களுக்கென தனியான ஆண் பாடசாலை இல்லை என்ற குறைபாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது. முஸ்லிம்கள் செறிவாக வழுகின்ற அக்குறணைப் பிரதேசத்தில் நீண்ட காலமாக வெள்ளப் பிரச்சினை இருந்து வருகிறது.
அதற்கென இதுவரையிலும் எந்தவொரு செயற் திட்டமும் மேற்கொள்ளப்பட வில்லை. அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
பெண்; பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன.
டிஜிட்டல் தொழில் நுட்ப ரீதியிலான கல்வியினை வழங்குவதற்கான வேலைத் திட்டங்களிலும் ஜனாதிபதி மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றார். அதே போன்று எங்கள் கிராம மட்டத்திலுள்ள பாடசாலையினுடைய அனைத்தும் அபிவிருத்திப’ பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு எத்தனை வேலைத் திட்டங்கள் கண்டி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
இத்தகைய தேவைகளை வளங்களையும் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநித்துவம் கட்டாயம் இருத்தல் வேண்டும். அந்த வகையில் கண்டி மாவட்ட முஸ்லிம்களாகிய நீங்கள் இம்முறை உங்கள் வாக்குகளை நிதானமாகச் சிந்தித்து தம் சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு தேசிய மக்கள் சக்தியில் முஸ்லிம் பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிநிதியாக என்னைப் பாராளுமன்ற அனுப்பி எனது வெற்றியை உறுதி செய்ய உங்களுடைய பெறுமதிமிக்க பொன்னான வாக்குகளை தந்துதவுமாறு கண்டி வாழ் முஸ்லிம், தமிழ். சிங்கள. கிறிஸ்தவ மக்களிடம் வேண்டிக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)