“சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்ய மாட்டேன்” -மத்திய மாகாண ஆளுநர் உறுதி மொழி
தற்போதுள்ள சட்டத்திற்குப் புறம்பாக எதையும் நான் செய்யப் போவதில்லை. என மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபேகோன்,
தெரிவித்தார்.
ஆளுநராக பதவியேற்றதையடுத்து மத்திய மாகாண அரச ஊழியர்களுக்கு நடாத்திய முதல் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்டி பல்லேகலையில் உள்ள மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் (18) மாகாண அரச ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பொதுச் சேவையை நிர்வகிக்க வேண்டும் என்ற கருத்து சமுதாயத்தில் உருவாகியுள்ளது. சேவையைப் பெற வருவோருக்குச் செவிசாய்த்து உதவ வேண்டும். இந்தப் பணியை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றுவது நமது பொறுப்பாகும்.
பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் மட்டத்தை உயர்த்துவதே அரச ஊழியர்களாகிய நாம் செய்ய வேண்டிய ஒரே கடமை என்றார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் தலைவர் எல்.டி.நிமலசிறி, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனக ஹேரத், மற்றும் திணைக்கள தலைவர்கள், மாகாண அரச அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
(ரஷீத் எம். றியாழ்)