உள்நாடு

அனுபவம் வாய்ந்தவர்களையே பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்; முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஹலீம்

அரசியல் துறை என்பது ஒரு வித்தியாசமானவையாகும். இன்றைய கால சூழலில் மக்களுடன் சேர்ந்து வாழக் கூடிய மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்த அனுபவம் வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளையே மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என்று கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம் எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“மக்களின் உணர்வுகளை நன்கு மதிக்கக் கூடிய மக்கள் பிரதிகளையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். ஏனென்றால் இன்றைய கால கட்டத்தில் பாராளுமன்றத்திற்காக போட்டியிடுகின்ற உறுப்பினர்களில் அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களே கட்டாயத் தேவையாக இருந்து கொண்டிருக்கின்றன.

இன்று பல கட்சிகள் பல புதிய முகங்களை அறிகமுப்படுத்தியிருந்தாலும் கூட அவர்கள் மக்களிடத்திலே பரீட்சயமான முகங்களாக நாங்கள் காணவில்லை. இன்று நாடு பலவிதமான பிரிச்சனைகளை எதிர்நோக்கியிருக்கின்ற தருணத்தில் நீண்ட காலம் அரசியல் அனுபவம் வாய்ந்த பழுத்த பாராமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு தேவை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.

எனவே கண்டி மாவட்ட வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் இந்த தேர்தலில் மிகவும் புத்திசாதுரியத்துடன் மிகவும் கரிசனையோடு சிந்தித்து வாக்களிக்க வேண்டியவாகளாக இருக்கின்றீர்கள்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் எமது சமுகத்தைச் சார்ந்த இருவர் போட்டியிடுகின்றோம்.

இந்த தேர்தலில் நானும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றோம். எமது சமூகத்திலுள்ள மக்கள் இந்தத் தேர்தலை மிகவும் அதாவனத்துடன் கையாண்டு முஸ்லிம்களுடைய பிரதிநித்துவங்களைப் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எனவே நீங்கள் உங்களுடைய வாக்குகளை எங்கள் இருவருக்கும் வழங்கி உங்கள் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்தக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *