மே.இ.தீவுகளை ஒருநாள் தொடரில் சந்திக்கும் இலங்கை குழாம் அறிவிப்பு; ஷிராஸிற்கு மீண்டும் வாய்ப்பு
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான முஹம்மது ஷிராஸ் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதில் நேற்று நிறைவுக்கு வந்த 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை இலங்கை அணி 2:0 என வெற்றி கொண்டதுடன் , மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் ரி20 தொடர் வெற்றியையும் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் அடுத்ததொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் ஆரம்பிக்கின்றது. இத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டு இலங்கை வந்தடைந்தும் இருக்கஇத் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நவகையில் அணியின் தலைரான சரித் அசலங்க பெயரிடப்பட்டிருக்க ரி20 தொடரில் பங்கேற்ற முன்னனி துடுப்பாட்ட வீரர்களே இத் தொடரிலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெத்தும் நிஷங்க, அpஷ்க பெர்ணான்டோ, குசல் மென்டிஸ் மற்றும் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் ஆகியோராவர். மேலும் ஜனித் லியனகே, சதீர சமரிக்ரம மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் சகலதுறை வீரர்களான துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோரோடு, வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான சமிந்து விக்ரமசிங்கவும் அணியின் உள்வாங்கப்பட்டுள்ளார். அத்துடன் வேகப்பந்துவீச்சாளர்களாக டில்ஷான் மதுசங்கவுடன் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான முஹம்மது ஷிராஸ் அணியின் இடம்பெற்றுள்ளார். அவருடன் அசித பெர்னான்டோவும் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்சன அடங்களாக மொத்தம் 16 வீரர்கள் கொண்ட அணியே அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் தொடரில் தனது அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட முஹம்மது ஷிராஸ் அப்போட்டியில் சிறப்பாகப் பிரகாசித்தத் தவறியிருந்தார். இருப்பினும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள சிராஸ் இம்முறை தனது திறமையை நிரூபிப்பார் என நம்பலாம்.
(அரபாத் பஹர்தீன்)