UGC இன் தலைவராக பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) புதிய தலைவராக பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல அறிஞரான பேராசிரியர் செனவிரத்ன மார்ச் 2022 இல் களனிப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் செனவிரத்ன லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் காமன்வெல்த் உறுப்பினராகவும், மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஃபுல்பிரைட் ஃபெலோவாகவும் இருந்துள்ளார்.
சமையல் எண்ணெய்களின் இரசாயனவியல் மற்றும் போஷாக்கின் நிபுணரான பேராசிரியர் செனவிரத்ன, முன்னர் 2014 முதல் 2017 வரை விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றியுள்ளார். மேலும் களனிப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நெறிமுறைகள் மறுஆய்வுக் குழு ஆகிய இரண்டின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்த வார தொடக்கத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.