யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம் புரண்டது
இன்று (18) காலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடையில் யானைகள் கூட்டம் எரிபொருள் ரயிலுடன் மோதி தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலின் விளைவாக இரண்டு யானைகள் இறந்துள்ளதுடன் புகையிரதத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். மேலும் நான்கு எரிபொருள் டேங்கர்கள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாகவும், இரண்டு கவிழ்ந்ததாகவும், ரயிலின் என்ஜின் மற்றும் மற்றொரு பெட்டியும் தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ரயில் பாதையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு-கொழும்பு பிரதான பாதையின் அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் திட்டமிடப்பட்ட புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.