உள்நாடு

people’s friendly என்ற மக்களுடன் நட்புறவு கொண்ட பொலிஸ் சேவையொன்றையே பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்..! -பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

பொது மக்கள் மக்களுடன் நட்புறவு கொண்ட (people’s friendly)பொலிஸ் சேவையொன்றையே எதிர்பார்க்கினறனர். ஆனால்  பொது மக்கள் தரப்பிலிருந்து பொலிசார் பக்கம் விரல் நீட்டப்படுகின்றது.குறை சொல்லப்படும் நிலைக்கு பொலிஸ் சேவை உள்ளாகியது பொலிஸ் அதிகாரிகளின் தவறினால் மாத்திரமல்ல.நாட்டின் பொலிஸ் சேவையில் குறிப்பிட்ட காலமாக நிலவிய பிழையான பொருளாதார அரசியல் காரணங்களினால் எமது பொலிஸ் சேவை குறை சொல்லப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது       இந்த நிலையை மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

        நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அனைவரினதும் தேவையாகும்.நாட்டின் சட்டம் ஒழுஙகை பாதுகாப்பதில் அரசியல் தலையீடுகளின்றி கடமை மேற்கொள்வது பொலிஸ் அதிகாரிகளின பொறுப்பாகும். இதற்கான உறுதிப்பாடு அதிகாரிகளிடம் இருத்தல் வேண்டும்.உயரதிகாரிகளின் சட்டரீதியான கட்டளைகளை  மாத்திரம் பின்பற்றவே கட்டுப்பட்டுள்ளதாகவும்  சட்டரீதியற்ற  கட்டளையொன்று  தரப்பட்டால் அதனை பிழையான  கட்டளை  என சுட்டிக்காட்டும் தைரியம் இருத்தல் வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

      களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பொலிஸ் பயிற்சி கல்லூரியில் ஆரம்ப பயிற்சி முடித்துக்கொண்ட 116 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 1169 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பயிற்சி நிறைவு செய்து வெளியேறினர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்ஓய்வு நிலை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனிவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியன்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக  உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.பயிற்சி முடித்து வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(எம்,எஸ்,எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *