எரிபொருள் திருடிய வியாபாரி கைது
வடமத்திய மாகாண மஹா உமா செயற்திட்டத்திற்குட்பட்ட வாகனங்களில் எரிபொருள் திருடி விற்பனை செய்யும் பாரிய அளவிலான வியாபாரி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட டீசல் தொகையுடன் சந்தேக நபரை (16) மாலை கைது செய்துள்ளனர்.
தம்புள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையிருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய (16) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்ப்பாசன அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வடமத்திய மாகாண மஹா உமா திட்டத்திற்குட்பட்ட வாகனங்களில் இருந்து திருடிய 1125 வீட்டர் டீசல் தொகையினை மகாமீகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்ற முடிந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கலென்பிந்துனுவெவ மீகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபராவர்.
கைப்பற்றப்பட்ட எரிபொருள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன்
எரிபொருள் தொகையை (17) கெக்கிராவ நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)