இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு
அண்மையில், இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு கம்பஹா மற்றும் களனி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் தவ்ஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கம்பஹா வலய இஸ்லாம் பாட ஆசிரிய, ஆசிரியர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொட கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புஹாரி அவர்கள் நவீன கற்பித்தல் முறைகள் என்ற தலைப்பில் முதலாவது அமர்வை நடாத்தினார்.
அடுத்து, கம்பஹா கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க் M.R ரம்ஸி அலி அவர்கள் வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் இஸ்லாம் பாட பரீட்சை அடைவுகளைப் பற்றி விவரித்தார்.
தொடர்ந்து, ‘ஆசிரியத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்’ எனும் தலைப்பில் ஒரு விழிப்பூட்டல் அமர்வை நடாத்தினார் ஊடகப் பயிற்றுவிப்பாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள்.
இந்நிகழ்வு திஹாரிய, தாருஸ் ஸலாம் ஆரம்பப் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதனை, கம்பஹா கல்வி வலயம் மற்றும் கல்வி அபிவிருத்தி மன்றம் (Educational Development Forum) இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.