தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் அரூஸ் அஸாத் பிரசாரப் பணிகளை ஆரம்பித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்ஹாஜ் அரூஸ் அஸாத் தனது தேர்தல் பிரசாரப் பணிகளை தனது பிறந்தகமான பேருவளை மருதானையிலிருந்து கடந்த நோன்மதி தினமான ஒக்டோபர் 17 ஆம் திகதி காலையில் ஆரம்பித்தார்.
தனது தகப்பனாரான பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் முன்னாள் தர்மஹர்தா அல்-ஹாஜ் எம்.ஐ.எம் அஸாதிடம் துண்டுப்பிரசுரங்களை முதன் முதலாக கையளித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன் போது தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென துஆ பிரார்த்தனையும் செய்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் பெருமளவிலானோர் வீடு வீடாகச் சென்று தேசிய மக்கள் சக்திக்கும் அல்-ஹாஜ் அரூஸ் அஸாதுக்கும் ஆதரவு தெரிவிக்கும் படி ஒவ்வொரு மக்களிடமும் அன்பொழுக கேட்டுக் கொண்டனர்.
இதன் போது திரண்டிருந்த மக்கள் மத்தியில் களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் அரூஸ் அஸாத் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக அமோக வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க உதவிக்கரம் நீட்டியது போல அவருக்கு ஒத்துப்போகக் கூடிய பாராளுமன்றத்தையும், பிரதமரையும் அமைக்க இந்த பாராளுமன்றத்தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பாராளுமன்ற ம் ஒன்றை தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்க உங்கள் மேலான வாக்குகளை திசை காட்டி சின்னத்திற்கு புள்ளடியிட்டு உங்கள் விருப்பத் தெரிவாக என்னையும் தேர்ந்தெடுக்க வழி செய்யுங்கள்.
(பேருவளை பீ.எம் முக்தார்)