ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கணணி பயிற்சி நெறிகள்
இளைஞர், யுவதிகளின் கணணி அறிவை மேம்படுத்தும் நோக்கில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கு கணணிப்பயிற்சிநெறிகள் இடம்பெற்றன.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் ஆலோசனைக்கமைய பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸின் வழிகாட்டலில் கணணி வன்பொருள் அறிமுகம் மற்றும் கணணித்திருத்தம் தொடர்பான இரு நாள் பயிற்சி வகுப்புக்கள் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நிதியொதுக்கீட்டில் அதன் உத்தியோகத்தர் திருமதி ஹப்ஸா பாயிஸ், ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் ஹபீபா சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு என்பன இணைந்து இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தன.
குறித்த பயிற்சிநெறியில் சுமார் 20 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதுடன், வளவாளராக எம்.எல் எம்.நஸீம் கலந்து கொண்டார். பயிற்சிநெறி முடிவில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)