களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம்; மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செய்து வந்த சமூகப் பணிக்கு அதன் நிர்வாகக் குழுவால் அங்கீகாரம்
கொழும்பை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லங்கா முஸ்லிம் ஜனாஸா சேவை சங்கத்தின் மூலம் மேற்படி “மகரகம அபேக்ஷா வைத்திய சாலையின் நோயாளர்களுக்கும், உடன் இருக்கின்ற உதவியாளர்களுக்கும் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தி வந்த மனநல, மார்க்க உபந்நியாசங்களும், துஆ பிரார்த்தனைகளும், பேதமின்றி செய்யும் உதவிகளும், தொடர்ச்சியாக செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சேவை 2024 பெப்ரவரி மாதம் முதல் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் பொறுப்பேற்று தொடர்ந்தும் செய்துவருகிறது
ஆறு மாதகாலம் இவர்களின் சேவைகளை அவதானித்த நிர்வாகம், காலாவதியாகாத, தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் அனுமதிப் பத்திரத்தை 21-08-2024 புதன் கிழமை அன்று குறிப்பிட்ட அபேக்ஷா வைத்திய சாலையின் முகாமையாளர் வைத்தியர்: அருண ஜயசேகர, தாதிகளின் பொரறுப்பதிகாரி வைத்தியர் பிரியந்த ஜயசேகர போன்றவர்களின் அங்கீகாரத்துடன், பிரதி முகாமையாளர் வைத்தியர்: குருகுல சூரிய மற்றும் வைத்தியர்: ரோஷான் போன்றவர்களினால் சங்கத்தின் தலைவர் எம்.எம்.எம். ஸியான் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
பிரதி ஞாயிறு தோறும் மாலை 3.00 மணி முதல் 4.30 மணிவரை இந் நிகழ்வு நடைபெறுவது மாத்திரமின்றி குறிப்பிட்ட ஒரு கிழமையில் பெண் நோயாளர்களுக்கான உளவியல் மற்றும் மார்க்க உபந்நியாசங்களும், துஆ பிரர்த்தனைகளும், மேற்கொள்ள இச்சங்கத்தின் பெண்கள் பிரிவுக்கு செயற்படுவதற்கான அனுமதியும் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சிக்குரியதே.
A.L.M. சத்தார்