உள்நாடு

அனைத்து மக்களும் நாட்டுப் பற்று ஒன்று பட்டு வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அஸ்லம்

இந்நாட்டில் எல்லாயின மக்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான ஒரு சூழலும் மற்றும் நாட்டுப் பற்றுடன் வாழ்வதற்கான சிறந்த ஒரு சூழலும்; இன்று உருவாகியுள்ளது. எனவே இந்நாட்டின் மாற்றத்தை கொண்டு வருவதற்கு குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும்; பெரும் பங்காளியாக இருந்துள்ளார்கள். அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் உங்களது பெறுமதியான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று குருநாகல் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம். கே. எம். அஸ்லம் தெரிவித்தார்.
இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின்; வேட்பாளராகிய களமிறங்கிய எம். கே. எம். அஸ்லம் அவர்கள் ஊடகவிளலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்


முஹம்மது ஸல் அவர்கள் அபிஸினியாவுக்கு ஹிஜ்ரத் போகும்படி கூறியது முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே. இவையும் ஒரு நஜ்ஜாஸி வேலைத் திட்டம் தான் என்பதை முஸ்லிம்களாகிய நாங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த வேலைத் திட்டத்தோடு நாங்கள் இணைந்து கொள்ள வேண்டும். அங்கு இனவாதம் இல்லை. ஊழல் இல்லை. மதவாதம் இல்லை. அங்கு மக்களை மனிதனாக மதிக்கக் கூடிய சூழல் உள்ளது.


எனவே நாங்கள் பல்லின மக்களிடையே அபிமானத்திற்குரிய நாற்றுப் பற்றுள்ள ஓர் இலங்கையராக நாம் வாழக் கூடிய ஒரு சிறந்த சூழல் இன்று உருவாகி உள்ளன. எனவே எமது அன்புக்குரிய புத்திஜீவிகளே உலுமாக்களே எம்மோடு நீங்களும் இணைந்து செயற்படுங்கள். அந்த வேலைத் திட்டத்திற்கு ஒரு பாலமாக அதை இணைக்கக் கூடிய ஓர் இடமாக நான் உங்கள் முன் வந்துள்ளேன். எனவே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் என்னைத் தெரிவு செய்வதன் மூலம் உங்களது அன்புக்கினிய அரசியல் பிரதிநிதியாக அல்லது ஒரு நம்பிக்கைக்குரிய தலைவனாக அல்லது ஒரு முழு நேர சமூகப் பணியாளனாக செயற்படுவேன் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.


(ஸ்ரீகாந்த்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *