அனுராதபுரத்தில் பிரதான கட்சிகளில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள்
அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை பிரதான கட்சிகளில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் தொர்தலில் போட்டியிடுவதுடன் இன்னும் சில கட்சிகளிலும் சுயாதீன குழுக்களிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இம்மாவட்டத்தில் இம்முறை 741.862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் சுமார் 50 ஆயிரத்திற்குட்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களை இலக்காக கொண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
இம்முறை முஸ்லிம் வேட்பாளர்களில் புதிய ஜனநாயக முன்னணியில் (சிலிண்டர் சின்னத்தில்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஐக்கிய மக்கள் கூட்டணியில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்) ஏ.ஆர்.எம்.தாரிக் (ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்) ஆர்.எம்.பாஷில் தேசிய மக்கள் சக்தியில் ஏ.எம்.முபாரக் ஜனசந்தான கட்சியில் எஸ்.ஐ.மொஹமட் ஹக்கீம் ஆகியோர் போட்டி இடுகின்றனர்.
அத்துடன் தராசு சின்னத்தில் 12 முஸ்லிம் வேட்பாளர் உட்பட சுயாதீன குழுக்களிலும் போட்டியிடுகின்றனர்.
அனுராதபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள 09 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 09 சுயாதீன குழுக்களிலும் 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)