உள்நாடு

புத்தளம் அசன் குத்தூஸ் மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணி வரலாற்று சாதனை.

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலய 16 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட அணி அகில இலங்கை ரீதியான காற்பந்தாட்ட போட்டியில் செம்பியனாகி வரலாற்று சாதனை படைத்தது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான காற்பந்தாட்ட இறுதிச்சுற்றுப்போட்டி 14ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்றது.இதில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் வியாவிழன் மத்திய கல்லூரி மற்றும் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்பலப்பரீட்சையில் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் அணியினர் 02 : 01 கோலினால் வெற்றி பெற்று செம்பியனாது.இந்த வெற்றிக்கு வழி அமைத்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு இவ் வெற்றியைப் பெற உறுதுணையாய் இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக பாடசாலையின் அதிபர் திரு. ஏ.ஜே.எம்‌. இல்ஹாம் அவர்கள் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *