உள்நாட்டோடு முழு உலகையும் அரவணைக்கும் ஸிமி ஹோல்டிங் நிறுவனத்திற்கு அகவை இரண்டு நிறைவு
பேருவளை அரப் வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸிமி ஹோல்டிங் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் 2024 ஒக்டோபர் 06 ஆம் திகதி தனது ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கிறது.
இதனை முன்னிட்டு, பேருவளை காலி வீதி மஸல சந்தியில் ஸமட் மாவத்தைக்கு எதிரே அமையப் பெற்றுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட விற்பனைக் காட்சியறை விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
இதன் ஓர் அம்சமாக இம்மாதம் 06 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான சுமார் ஒரு மாதம் “ஸிமி” காட்சியறைகளில் கொள்வனவு செய்யும் சகல பொருட்களுக்கும் 10% வீதம் விலைக்கழிவு வழங்கப்படுகிறது.
அத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 50% வரையிலான விலைக்கழிவுச் சலுகையும் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பேருவளை மஸலையிலுள்ள மூன்ளு மாடிகளைக் கொண்ட கம்பீரமான காட்சியறை 06 ஆம் திகதியிலிருந்து முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களால் நிரம்பி வழிவதைக் காண முடிகிறது.
விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஸிமி உரிமையாளர் இஜ்லான் யூசுப் மற்றும் அதிதிகளில் ஒருவரான, இலங்கையின் கரையோரப் பகுதியின் சுமார் 1500 கிலோமீற்றர் தொலைவை 45 தினங்களில் கால் நடையாக பவனி வந்த சாதனை வீரர் ஷஹ்மி ஷஹீத் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக கேக்கினை வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அதன்போது, இஜ்லான் ஹாஜியாரினால் ஸிமி நிறுவனத்தின் தோற்றம், வளர்ச்சி, உருவான பின்னணி குறித்து சுருக்கமான தகவல்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை தொடர்ந்து படியுங்கள்:
பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட இஜ்லான் ஹாஜியார் ஆரம்பத்தில் இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் வீட்டு விநியோகப் பொருட்கள், அழகு சாதனங்கள் குறிப்பாக சிறுவர், இளைஞர், யுவதிகளுக்கான அணிகலன்கள் அடங்கிய பொருட்களைக் கொண்ட விற்பனை நிலையம் ஒன்றை பேருவளையில் ஆரம்பித்துள்ளார். Big city group of company – பிக் ஸிட்டி குழுமம் என்ற பெயரில் நிறுவனமாக உழைப்பில் ஈடுபட்டு வந்தார். தனது அர்ப்பணிப்பு, விடா முயற்சியில் முன்னேற்றம் கண்டுவந்த இவர் தனது ஈடுபாட்டை மக்கள் பயன்படுத்தவும், பொது நலத் தொண்டுகளிலும் பங்களிப்புச் செய்யவும், கூடிய தான தர்மங்களைச் செயற்பாடுகளைச் சமூகத்திற் கொண்டு, Symi Holding (PVT) Ltd – ஸிமி ஹோல்டிங் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து செயற்பட்டு வருகிறார்.
குடும்பப் பெயருடன் சேர்ந்த இவரது முழுப்பெயரான சேஹ் யூசுப் முஹம்மத் இஜ்லான் என்ற பெயருக்குரிய ஆங்கில முதல் எழுத்துக்களான “symi” சுருக்கப் பெயரே “ஸிமி” என்று குறிப்பிடப்படுவதாகும்.
இதன் தோற்றம் செயற்பாடுகள் குறித்து குறிப்பிடுகையில், சவூதி நாணயத்தில் 50 – ஐம்பது ரியால் நிதியுடனே ஸிமி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு வருட குறுகிய காலத்திற்குள் மாத்தறை, ஹொரனை, குருநாகல் ஆகிம பிரதேசங்களிலும் கிளை காட்சியறைகள் நிறுவப்பட்டு அபரிமித வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் வருவாய் பல்துறைசார் தரப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதாவது, தனது குடும்பத்திற்கு 10% வீதம், இலங்கை மக்களுக்கும், 10% வீதம், அரச வைத்தியசாலைக்கு, 5% வீதம், அரச பாடசாலைகளுக்கு, 5% வீதம், மெளலானா குடும்பத்தினர்களுக்கு, 5% வீதம், அனாதரவான அநாதைகளுக்கு 5% வீதம்…. என்ற அடிப்படையிலேயே வருமானம் ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகையில் ஸிமி நிறுவனத்தில் குறைந்தபட்சம் சுமார் ஒரு ரூபாவுக்கு பொருள் கொள் முதல் செய்வோரும் இந்நிறுவனத்தின் பங்குதாரராகி விடுகிறார். அந்த நிதியும் நற்பணிகளைச் சென்றடைகிறதென்பதே அதன் அர்த்தமாகும். இது உலகளவில் வியாபிக்கும் போது முழு உலக மாந்தர்களும் இதன் பங்குடைமைதாரிகளாகின்றமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
ஸிமியின் ஓரங்கமாகவே கடந்த மாதங்களில், திறமை, ஆற்றல்கள் இருந்தும் கரையோரப்பாதையூடாக இலங்கையைச் சுற்றிவந்து சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த செயல் வீரன் ஷஹ்மி ஷஹீதின் கனவை நனவாக்க அவருக்கு ஆரம்பம் முதல் நிறைவடையும் வரை அனுசரணை வழங்கிய நிகழ்வைக் குறிப்பிடலாம்.
இவரது நடை பவனியால் எமது நாட்டின் உல்லாசப் பயணத்துறைக்கு பெரும் உந்து சக்தியொன்று கிடைத்தது. மேலும் எமது ஸிமி நிறுவன வளர்ச்சிக்கும் கை கொடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் புல்மூடை, திருகோணமலை உள்ளிட்ட இடங்களில் இருந்தெல்லாம் தொலைபேசி ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு எம்மோடு கை கோர்க்க காத்திருக்கிறார்கள். ஷஹ்மியின் நடை பவனியின் பெறுபேற்றுக்குக் கிடைத்த வெற்றிகளில் இதுவும் ஒன்றெனலாம்.
தன்ஸானியா நாட்டிலும் ஸிமி ஜெம் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அயல்நாடு இந்தியா, சீனா வரையிலும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
இஜ்லான் ஹாஜியாரின் மூத்த மகன் இன்ஸாப் இஜ்லான் பிக் ஸிட்டி நிறுவனத்தை திறம்பட வழி நடாத்திக் கொண்டிருக்கிறார். அவரின் இரண்டாவது மகன் ஆஸிப் இஜ்லான் கடந்த இரண்டு வருடங்களாக “ஸிமி” நிறுவனத்துக்கு பொறுப்பாக இருந்து, அதன் வளர்ச்சிக்காக அர்பணித்துக் கொண்டு வருகிறார்.
மேலும், இஜ்லான் ஹாஜியாரின் மறைந்த தாயாரின் பெயரால் மற்றுமொரு நிதியம் நஸவா பவுண்டேசன் என்ற பெயரிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சிறந்த நிதி முகாமைத்துவம், சிறப்பான நிருவாகம், நியாயமான விலை வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரிகளாகக் கருதிச் செயற்படுத்தல் போன்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதே ஸிமியின் வெற்றிக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.
எதிர்காலத்தில் ஸிமி புட்கோவ், பெயார்பூட் சாரம், பெயார்பூட் சாரி, பெயார்பூட் செர்ட் என்றெல்லாம் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி என்றெல்லாம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரவலாக இயங்கச் செய்யும் சாத்தியக் கூறுகள் இப்போதே கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
ஸதகா முறைமையை முன்னிறுத்தி செயற்படும் ஸிமி உலகளவில் வியாபிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிய இரு கரமேந்தி பிரார்த்திப்போம்.
(பேருவளை பீ.எம் முக்தார்)