உள்நாடு

அகில இலங்கை பாடசாலை 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் வரலாற்றில் முதன்முறையாக கற்பிட்டி அல் அக்ஸா இரண்டாம் இடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் 11, 12, 13 மற்றும் 14ம் திகதிகள் இடம்பெற்ற மேற்படி போட்டிகளில் தேசிய ரீதியில் பலம் பொருந்திய மாவனெல்லை சாஹிரா தேசிய பாடசாலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் செம்பியனாக திகழும் கிண்ணியா மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி மற்றும் கந்தானை டி மெசிநோட் கல்லூரி ஆகிய அணிகளை வெற்றி கொண்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *