வடபுல பிரபல்யமான தமிழ் அரசியல்வாதி கணேஸ்வரன் வேலாயுதம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு ஆதரவு; கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவிப்பு
இந்நாட்டின் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக அவர்கள் தெரிவு வெய்யப்பட்டமை உண்மையிலேலேயே எனக்கு பெரியதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே நாட்டின் மாற்றத்தைக் கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சத்தியின் வெற்றிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக என்று யாழ்ப்பாணத்தில் கடந்த பொதுத் தேர்தலில் பிரதான கட்சி ஒன்றில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டவரும் பிரபல்யமான சமூக சேவையாளர் சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் இயக்குனருமான கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் மலையகத்திற்கான தேசிய குழு உறுப்பினரும் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியபோது கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
எமது நாட்டுக்கு சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு கிடைத்தது என்று இருந்தாலும் கூட சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அநுர குமார அவர்கள் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே நிகழ்ந்தது என்று கூறலாம். இதில் விசேடமாக சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.
ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் அதை நாங்கள் மாற்ற வேண்டும். எங்களுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும். அதற்காக நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நான் கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டேன். இந்த மக்களைத் திருத்து முடியாது என்ற காரணத்தினால் மீண்டும் லண்டன் சென்று ஓய்வு பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
இந்தத் தேர்தலைப் பார்த்தவுடன் அரசியல் நேரடியாக களமிறங்காமல் இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து இவர்களுக்கு ஒத்துழைப்பையும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளேன்.
மூன்று வருடத்தில் இந்த நாட்டை மாற்றியமைக்கலாம். எமது நாடு விவசாயத்திற்குரிய நாடு. நாங்கள் விவசாயத்தை சரியான முறையில் செய்வதில்லை. நாம் விவசாயத்தின் ஊடாக ஒரு வெற்றிபெற்ற நாடாக மாற்றியமைக்க முடியும்.
எமது ஜனாதிபதி சிங்கப்பூர் நாட்டு ஜனாதிபதி லீக்வான் சிங் எவற்றைச் விரும்பினாரோ அப்பொழுது அவர் இலங்கை போன்று தன்னுடைய நாடு இருக்க வேண்டும் என்று விரும்பினார். செல்வந்த நாடுகளில் முதன்மை நாடு சிங்கப்பூர் உள்ளன. அதே மாதரி எமது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக கொண்டு வருவார் என்று நாம் நம்புகின்றோம். ஊழல் நிறைந்த ஆட்சிக் குடும்பத்தில் இருந்து நாங்கள் விடுதலை பெற்று இருக்கின்றோம்.
எனவே தேசிய மக்கள் சக்திக்கு வெற்றிக்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மலையக தேசிய மக்கள் சக்தியின் குழு உறுப்பினரும், கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் உரையாற்றும் போது
சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தாலும் கூட அவர் கண்டியுடன் நிறையத் தொடர்புகளை வைத்திருக்கின்றார். முக்கியமாக அவர் பல்வேறு முக்கியமானஅரசியல் தளங்களில் இருந்தாலும் கூட. இன்று எமது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக அவர்களின் தலைமையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் கொண்டு மலையகப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்துவதற்காக எம்மோடு இணைந்து செயற்படுவதற்காக எங்களுடன் கைகோர்த்துள்ளார்கள்.
அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல. மத்திய மலைநாட்டுக்கும் அவருடைய சேவை எங்களுக்கு தேவையாக இருக்கின்றது. இந்த நாட்டினுடைய மறுமலர்ச்சிக்காகவும் இந்த நாட்டினுடைய மாற்றத்திற்காகவும் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் எங்களோடு இணைந்து செயற்பாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)