விளையாட்டு

மியன்மாருக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை; 2ஆவதும், இறுதியுமான போட்டி இன்று

ஃபிபா சர்வதேச நட்புறவுப் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் மியன்மார் உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளில் இன்று (13) 2ஆவதும், இறுதியுமான போட்டி இலங்கை நேரப்படி 3 மணிக்கு மியான்மாரின் யாங்கூனில் உள்ள சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஃபிபா சர்வதேச நட்புறவு உதைப்பந்தாட்ட தொடரில் கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்ற முதல் போட்டியில் மியன்மார் அணி 2:0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாவதும், இறுதியுமான போட்டி இன்று அதே மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கின்றது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இப் போட்டியில் சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *