இலங்கை எதிர் மே.இ.தீவுகள் ரி20 தொடரின் முதல் போட்டி இன்று தம்புள்ளையில்
சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (13) தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய இரு வகைத் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகின்றது. அதற்கமைய இத் தொடரின் முதல் போட்டி இன்று (13) இலங்கை நேரப்படி 7 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
அதற்கமைய இவ்விரு அணிகளும் இதுவரையில் 15 ரி20 சர்வதேச போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடியிருக்க இதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளதுடன், மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக இவ்விரு அணிகளும் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற டுபாயில் இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ணத் தொடரில் மோதியிருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் இத் தொடருக்காக அளிவிக்கப்பட்டுள்ள சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிசங்க, குரல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் அசலங்கை ஆகியோரின் துடுப்பாட்டம் இலங்கைக்கு கை கொடுக்கும் என எதிர்க்கும் அதே நேரம் சுழலில் வனிந்து ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்கச ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பர் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் இலங்கையில் தற்போது நிழவும் கடும் மழையுடனான காலநிலையால் இப் போட்டி பாதிப்படையலாம் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)