புத்தள மாவட்டத்தில் 8 பேரை தெரிவு செய்ய 429 வேட்பாளர்கள் களத்தில்
பாராளுமன்றத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்திற்காக 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அடங்களாக மொத்தம் 39 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மேற்கொள்ள இலங்கை தேர்தல் திணைக்களம் அவகாசம் அளித்திருந்தது. அதற்கமைய இன்று (11) நண்பகல் 12 மணிவரை புத்தளம் மாவட்ட செயலகத்தில் வேட்பமணுத்தாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பின்னர் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆட்சேபனை செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் புத்தள மாவட்ட செயலாளரும், புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உரையாற்றுகையில், ” இத் தேர்தலில் புத்தள மாவட்டத்தில் இன்றைய தினம் (11) நண்பகல் 12 மணிவரை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 26 வும், சுயோட்சைக் குழுக்கள் 18 வும் அடங்களாக மொத்தம் 44 அரசியல் கட்சிகள் வேட்புமணுத்தாக்கல் செய்திருந்தன. அதன் பின்னர் இதிலிருந்து 2 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 3 சுயோட்ச்சை குழுக்கள் அடங்களாக 5 கட்சிகளின் வேட்புமணுத்தாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 15 சுயேட்ச்சை குழுக்களுமாக மொத்தம் 39 கட்சிகள் போட்டியிடுகின்றது. குறிப்பாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் சிங்கள தீப ஜாதிக பெரமுன மற்றும் சமபிம கட்சி ஆகியன நிராகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.” என்றார்.
(அரபாத் பஹர்தீன்)